Wallet இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் .. ஆனா இது என் கூட ரொம்ப காலம் உழைச்சி இருக்கு ,,
எனக்கு விவரம் தெரிஞ்சி இத பயன்படுத்த ஆரம்பிச்சிது முத வேலை கிடைசித்துக்கு பிறகுதான்..
வேலை கிடைகிறது எவ்ளோ பெரிய விசயம் அப்படின்னு எனக்கு தெரியும் என்ன போலவே ரொம்ப நாள் யாரும் இத வாங்கல போல.. எனக்குனு காத்துகிட்டு இருந்துச்சு போல .. நான் இத திநகர்ல பார்த்தேன் .. பார்த்ததும் பிடிச்சி போச்சு ..
பாவம் வியாபாரம் செய்கிறவனும் ரொம்ப கஷ்டத்துல இருப்பான் போல விலையை குறைக்க மாட்டேன்னு சொல்லிட்டான் .. ரொம்ப பிடிச்சி அதனால அவன் சொன்ன விலைக்கு வாங்கிட்டேன் ..
முதல் மாத சம்பளம் வந்ததும் atm ல சுமாரா ஒரு 4k எடுத்து இதுல வச்சிட்டு போறாபோ என்னமோ உலகத்தை வாங்கிடோம்னு அப்படி ஒரு நெனைப்பு ..
அதுக்கு பிறகு நண்பர்கள் கேட்டபோ இந்தடா அப்படின்னு இதுல இருந்து எடுத்து கொடுரக்போ என்னமோ கர்ணன் தம்பியா பிறந்த நெனைப்பு
உள்ள எதவாது ஒரு இடத்தில வச்சிருந்து கொடுக்கும் ..
பிறகு வீட்டுக்கு எதுனா வாங்கிட்டு போறபோ என்னமோ நான்தான் குடும்ப பொறுப்ப சுமக்கிற மாதிரி ஒரு சந்தோசம் ..
இப்படி பல சொல்லிட்டே போகலாம் ..
எத்தனயோ நாள் மாச கடைசல வானம் பார்த்த பூமி மாதிரி வெறுமன என்ன பார்த்து இருக்கு
எத்தனயோ நாள் எதிர்பாரா விதமா பணத்தை உள்ள எதவாது ஒரு இடத்தில வச்சிருந்து கொடுக்கும் ..
சில நாள் எங்கயோ எதனயோ மறந்து இல்ல தொலச்ச பொருள உள்ள எதவாது ஒரு இடத்தில வச்சிருந்து கொடுக்கும் ..
மழை இத ரசிக்கிற நேரங்களில் என்னோடு சேர்ந்து இதுவும் நனச்சனுண்டு
காசு இல்லதா நேரங்களில் பல தத்துவங்கள் கற்று கொடுத்தது உண்டு ..
பஸ் கண்டக்டர் கிட்ட திட்டு வாங்க கூடாதான்னு நேனைகிறபோ இந்தா பிடி சில்லரை அப்படின்னு எனக்கு தரும் ..
எதிர்பா விதமா வந்து நின்ன பல செலவுகளுக்கு நின்னு கை கொடுத்த என் நண்பன் இந்த wallet ...
மனிதன் குணம் மாதிரி பல பல ரூபா நூறுகள் பார்த்து இருக்கும் ஆனா என்னைக்குமே இது எங்கும் எனக்கு துணையாய் இருந்தது உண்டு ...
பாவம் இதுக்கு ஒரு girlfriendk செலவு செயும் பாக்கியம் கொடுத்து வைக்கல ( ஹி ஹி ஹி எனக்கும் அமையல ) ..
ஹ்ம்ம் இப்படி பல வாழ்கை அனுபவங்களை கற்று கொடுத்து இன்று ஓய்வு பெருகிறுது... பாவம் பட்ட ஏழை போல ரொம்ப கஷ்ட பட்டு போச்சு ...
ஓய்வு எடுக்கட்டும் ... இதோ இன்னும் ஒரு நண்பன் அவனை போலவே .. வாடா நீ என்ன வாழ்கை பாடம் கற்று கொடுக்க போறியோ பாப்போம் ...
PS: Kindly ignore spell mistakes ( I can't able to edit words in google translate )
ஒரு வாலெட் மாத்தினத்தை எவ்ளோ சுவாரஸ்யமா சொல்லிருகீங்க ரகு!!!!! சூப்பர்:)) சரி புது வாலேட்டுக்கு எப்போ ட்ரீட்:)))
ReplyDeleteநன்றி :) :) கணடிப்பாக கொடுத்துறலாம் :) :)
ReplyDelete