Sunday, March 9, 2014

படித்ததில் பிடித்தது ...

படித்ததில் பிடித்தது ...

ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்,ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுகிறார்கள்! நிகழ்காலத்தில்!


இரவில் அடித்துக்கொள்வதும் காலை எழுந்த உடன் ஏதும் நடக்காத்து போல் டீ கடைக்கு போகும் நண்பர்கள் இருக்கும் வரை வாழ்க்கை சொர்க்கமே!!!!!

படித்ததில் பிடித்தது ...

படித்ததில் பிடித்தது ...


அன்றை விட இன்று இன்னும் அழகாகத் தான் இருக்கிறாள் விழிகளில் அதே விழி ஈர்ப்பு விசையோடு!அழைப்புக்கள் வந்தால்கூட
எங்கே இருக்கிறதென்று
தேடித்தேடி எடுக்கப்பட்ட என் தொலைபேசி....
இப்போதெல்லாம்,
அழைப்புக்கள் வராமலேயே
அடிக்கடி என் கைகளில் தவழ்கிறது
எங்கே நீ அழைத்து
நான்தான் தவறவிட்டிருப்பேனோ என்ற ஆவல்களோடு....!!!


எனது ஆசை ....
அவள் எனது தாலியை சுமக்க தொடங்கிய நிமிடத்தில் இருந்து
அவளது வாழ்வில்
துக்கம் , சோகம் , கவலை , அழுகை
போன்ற வாக்கியங்கள் அவள் அகராதியில் இருந்து நீங்க வேண்டும் .
என்னை மனதார தாங்கியவள் அவள்
அவளே எனது முதல் குழந்தை
அவளை நான் என் மூச்சு உள்ளவரை சுமக்க வேண்டும் என் மார்பில்

படித்ததில் பிடித்தது ...ஒரு தாயின் அறிவுரை… திருமணமாகப் போகும் தன் மகனுக்கு:

திருமணம் ஆவதற்கு முன்னால் உன்னிடம் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். இது உனக்கு வியப்பாக இருக்கலாம். பெண்ணுக்குத்தானே இப்படிச் சொல்லுவார்கள் என்று நினைக்கிறாயா? இல்லை கண்ணா... நாங்கள் மனம் திறந்து சொல்வதைச் சொல்லி விடுகிறோம். காதில் போட்டு வைத்தால் சில விஷயங்கள் மனதிலும் இறங்கும். அதுவே தக்க சமயத்தில் உதவக்கூடும்!

பெஸ்ட் அம்மா பெஸ்ட்!

இதுவரையில் பெண்ணென்று வீட்டில் உன் அம்மாவை மட்டுமே பார்த்திருக்கிறாய். அவள் சமைப்பதையும், வீட்டை வைத்துக் கொள்வதையும், பாடம் சொல்லித் தருவதையும் பாடுவதையும், கோலம் போடுவதையும், பண்டிகைகளை முழுமையாகக் கொண்டாடுவதையும் எதிலும் திறம்பட எடுக்கும் முடிவையும் பார்த்து என் அம்மாதான் பெஸ்ட் என்று எண்ணியதில் தப்பில்லை. உள்ளூர எனக்கு அது பெரிய கிரீடம்தான்!

இனிமேல் அதையே மனதில் அசைபோடாதே! அதைத் தாண்டி வா! அம்மா பெஸ்ட் என்ற உன் கருத்தை உள்ளத்தின் ஆழத்தில் மட்டும் வைத்துக்கொள். வார்த்தைகளில் உன்னவளுக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. தாய் சொல்லைத் தட்டாதே! சிறிய முகமூடிதான். அதைத் திறம்படப் பயன்படுத்து! அது எல்லோரையும் மகிழ்விப்பதைப் புரிந்துகொள்வாய்.

தாய்க்குப் பின் தாரம்!

நலங்கு மஞ்சள் காயும் முன்பே பிரம்மதண்டத்தைத் தலையில் வைத்தது போல் எங்க அம்மா ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.,அவர்களை அனுசரித்துக் கொண்டு போக வேண்டும் என்ற வசனங்களைப் பேசாதே! அப்படிச் சொன்னால் அவளுக்கு மனதில், அப்படியானால் அம்மா பிள்ளையாகவே இருக்க வேண்டியதுதானே. அப்புறம் எதுக்கு நான்? என்று சிறு கசப்பு உணர்வு தோன்றும். அவள்தான் உன் உலகம் என்பதை அவளுக்குப் புரியவை. அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக் கொள்வார்கள் என்றும் சொல்லாதே! அதையே என்றாவது உன் மீது திருப்பக் காரணமாக நீ இருக்கக்கூடாது. சண்டையில்லாவிட்டால் நீ கேட்டதெல்லாம் கிடைத்திருக்குமா?

காபியை சர், புர் என்று உறிஞ்சிக் குடிக்காதே. உனக்கொரு மனைவி வந்தால், நல்லா வளர்த்திருக்கா என்று என்னைக் குறை சொல்வாள் என்று அடிக்கடி சொல்வேனே. இன்று உன்னுடைய நடை உடை பாவனையில் உயர்வைக் கண்டு நான் பூரிக்கிறேன். வரப் போகிறவள் பெருமையடைவாள். நல்ல ஆசானாகப் பணி ஆற்றிய நிறைவு எனக்கு.

தாயா? தாரமா?

அம்மா சமையலைத் தவிர வேறொன்றும் நீ அறியாததால் அது மிக உயர்வாக உனக்குத் தோன்றுவதில் வியப்பில்லை. இருந்தாலும் வார்த்தைக்கு வார்த்தை, எங்க அம்மா செய்கிற மாதிரி சேப்பங்கிழங்கு ரோஸ்ட், முருங்கைக்காய் சாம்பார் மாதிரி வராது என்று ஒப்பிட்டுப் பேசாதே! உன் அம்மாவுக்கு உன் மனைவியாகப் போகிற பெண்ணைப் போலக் கார் ஓட்டவும், வங்கிப் பணி ஆற்றவும், டைம் மேனேஜ்மெண்ட்டும் தெரியாதப்பா! நான் அன்றைய கெட்டிக்காரி! இவள் இன்றைய மங்கை!

அம்மாவின் கட்டளைகள் ஆறு!

உனக்கு உன்னிடம் உள்ள பேரன்பை மனதில் கொண்டு நான் சொல்லும் அறிவுரைகள் ஆறு:

1. அம்மா புராணம் பாடாதே!

2. அம்மாவோடு ஒப்பிடாதே!

3. அம்மாக் கோண்டு என்ற பட்டம் பயன் தராது!

4. அம்மாவைக் கொஞ்சம் பீடத்திலிருந்து இறக்கி வை. அவளும் சற்று இளைப்பாறட்டும்!

5. அம்மா தேவைப்பட்டபோதெல்லாம் உதவிக்கு வருவாள் என்பதை மட்டும் சொல்லி வை!

உன்னவளுடைய அம்மாவையும் மதிக்கக் கற்றுக் கொள்!

பின் குறிப்பு :- மாமனாரை உயர்த்திப் பேசுவதால் மருமகளுக்கு எந்தவித கசப்பும் ஏற்பட்டதாகச் சரித்திரமே கிடையாது! ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி... நீடூழிவாழ வாழ்த்துக்கள்...!

படித்ததில் பிடித்தது ...

படித்ததில் பிடித்தது ...


I want to be in a relationship
where...
She can wear my large t-shirt at
night
We can both sleep together in one
bed
We can be like kids making silly
faces and doing baby talks...
I can shout at her when I’m mad,
then she’ll hug me tight so I’ll shut
up
She’ll pull me close to her so I
won’t have the chance to let go...
We’ll watch horror movies
together
I’ll kiss her secretly then she’ll
smile
We’ll fight, but not that much
We’ll break up but get back
together few days after
She’ll make me the luckiest boy in
the world I’m the only Boy she
loves ! :) :') ♥

படித்ததில் பிடித்தது ...

படித்ததில் பிடித்தது ...


ஆசை தான் எனக்கு !!!!!..... மனைவியாய் இறுதிவரை ஒரு தோழியாய் வரப்போகும் அவள் யார் என்று அறிய ஆசை!...

 வாரம் ஒரு முறையாவது அவளுக்கு முன் எழுந்து அவள் தூங்கும் அழககை ரசிக்க ஆசை...

தினமும் மலர் சூடி அவள் நெற்றியில் என் இதழ் சேர்க்க ஆசை....

 அனைவரும் இருக்கும் நேரத்தில் கள்ளவனாய் அவள் இடைக்கில்ல ஆசை...

யாரும் இல்லா நேரத்தில் முத்தத்தில் அவளை நனைக்க ஆசை குழந்தையாய் அவள் செய்யும் தவறுகளை ரசிக்க ஆசை....

யாரும் இல்லா சாலையில் அவள் கைபிடித்து நடக்க ஆசை.....

முதன் முதலில் நான் வாங்கும் வாகனத்தில் அவளோடு அமர்த்து வெகுதூரம் செல்ல ஆசை...

 மழை நேரத்தில் ஒரு குடைக்குள் அவளுடன் இருக்க ஆசை....

மழையில் நனைந்த என் தலையை அவள் புடவை நுனிகொண்டு துடைக்க ஆசை..

என் உயிர் சுமக்கும் அவளை அன்று என் கண்ணுக்குள் வைத்து பார்க்க ஆசை...

என் உயிர் பிறந்த பின்பும் அவள் முகம் முதல் பார்க்க ஆசை...

 இப்படியே 60 ஆண்டு காலம் அவளோடு நான் வாழ ஆசை...

 60 ஆன பின்பும் அவள் முகத்தில் விழுந்த ரேகையும் கன்னத்தில் விழுந்த குளியையும் மூக்கு கண்ணாடி போட்டு ரசிக்க ஆசை அன்றும் கோலுன்றி அவள் நடவாமல் என் தோல் பிடித்து நடக்க ஆசை...

 இருவர் இறக்கும் நேரத்திலும் அவள் மடியில் என் தலை இருக்க அவள் என்னை பார்த்து புன்னகைக இருவரின் உயிர்பிரிய ஆசை..

Tuesday, March 4, 2014

Kavithai

நான் எழுதிய முதல் கவிதை

எய்ட்ஸ்

இளமையின் விபரீத ஸ்பரிசத்தில்
கருவில் வளரும் குழந்தை....