Thursday, February 13, 2014

தாலாட்டும் காற்றே வா

தாலாட்டும் காற்றே வா ,

தலை கோதும் விரலே வா ,
தொலை தூர நிலவே வா ,
தொட வேண்டும் வானே வா ,


உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல் ,
என் ஜென்மம் வீணென்ற போவேனோ ?
உன் வண்ண திரு மேனி சேராமால் ,
என் வயது பாழ் என்று ஆவேனோ ?
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல் ,
என் ஆவி சிறிதாகி போவேனோ ?
என்னுயிரே நீதானோ ?
என்னுயிரே நீதானோ ?


கண்ணுக்குள் கண் வைத்து ,
கண் இமையால் கண் தடவி ,
சின்ன தொரு சிங்காரம் ,
செயாமல் போவேனோ ?
பசிலந்த வேல்லையிலே ,
பெண் அழகு என் மார்பில் ,
மூச்சு விடும் ரசனையை ,
முகராமால் போவேனோ
உன் கட்டு கூந்தல் காட்டில் ,
நுழையாமல் போவேனோ ?
அதில் கள்ள தேனை கொஞ்சம் ,
வருகாமல் போவேனோ ?

நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை ,
ஒலி பதிவு naan சையா மாட்டானோ ?
நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை ,
ஒலி பதிவு நான் செய்ய மாட்டேனோ ?
நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில் ,
அதை உனக்கு ஒலி பரப்ப மாட்டேனோ ?
என்னுயிரே நீதானோ ?
என்னுயிரே நீதானோ ?

தாலாட்டும் காற்றே வா ,
தலைகோதும் விரலே வா ,


ஒரு நாள் ஒரு பொழுது ,
உன் மடியில் நான் இருந்து ,
திருநாள் காணாமல் ,
செதொளிந்து போவேனோ ?
தலையெல்லாம் பூக்கள் பூத்து ,
தள்ளாடும் மரமேனி ,
இலையெல்லாம் உன் பேரை ,
எழுத்தாலும் போவேனோ ?
உன் பாதம் தாங்கி நெஞ்சில் ,
பதியாமல் போவேனோ ?
உன் கண்ணீர் எச்சில் ருசியை ,
அறியாமல் போவேனோ ?

உன் உடலை உயிர் விட்டு போனாலும் ,
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ ?
உன் உடலை உயிர் விட்டு போனாலும் ,
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ ?
உண் அங்கம் எங்கெங்கும் உயிராகி ,
நீ வாழும் வரை நானும் வாழ்வேனோ ?
என் உரிமை நீதானே ?
என் உரிமை நீதானோ ?

செங்க சூள காரா.. செங்க சூள காரா..

செங்க சூள காரா.. செங்க சூள காரா..
காஞ்ச கல்லு வெந்து போச்சு வாடா..
மேகம் கூடி இருட்டி போச்சு வாடா..

சுட்ட சுட்ட மண்ணு கல்லாச்சு
நட்ட நட்ட கல்லு வீடாச்சு
நச்சு நச்சு பட்ட நம்ம பொழப்பு தான்
பச்ச மண்ணா போச்சு..
வித்த வித்த கல்லு என்னாச்சு?
விண்ண விண்ண தொட்டு நின்னாச்சு!
மண்ணு குழி போல நம்ம பரம்பர
பள்ளம் ஆகி போச்சு!!
ஐயனாரு சாமி அழுது தீர்த்து பார்த்தோம் :(
சொரனகெட்ட சாமி..! சோத்த தான கேட்டோம்?
கால வாச கங்கு போட கள்ளி முள்ளு வெட்டி வாடா...!

மண்ணு மண்ணு மட்டும் சோறாக
மக்க மக்க வாழ்ந்து வாராக..
மழ மழ வந்து மண்ணு கரைக்கையில்
மக்க எங்க போக?
இத்த களிமண்ணு வேகாது!
எங்க தல முற மாறாது!!
மண்ண கிண்டி வாழும் மண்ணு புழுவுக்கு
வீடு வாசல் ஏது..?!
ஐயனாரு சாமி கண்ண தொறந்து பாரு 
எங்க சனம் வாழ, உன்ன விட்டா யாரு?
எதிர்காலம் உனக்காக எட்டு எட்டு வெச்சு வாடா..
தந்தானே நானே... தந்தன்னானே நானே...
வேர்வ தண்ணி வீட்டுக்குள்ள வெளக்கு ஏத்தும் வாடா...--